இரத்த சந்தன மாலை 8 MM (108+1 மணிகள்)
இரத்த சந்தன மாலை 8 MM (108+1 மணிகள்)
பலன்கள்:
இயற்கையான முறையில் சரும அழகை பாதுகாக்கவும், மெருகேற்றவும் எந்த பக்கவிளைவும் ஏற்படாத வகையில் நமக்கு உதவுவதே இரத்த சந்தன மாலை ஆகும். முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இரண்டையும் களைவதற்கு சிவப்பு சந்தனத்துடன் பன்னீரை சேர்த்து பூசி வர, அதன் தாக்கம் குறைந்து முற்றிலும் மறைந்து விடுகிறது. இதனுடன் தயிர் மற்றும் பாலை கலந்து பூசி வர பளபளக்கும் சருமத்தை பெற முடியும். இதை உடலில் அணிவதால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.
இரத்த சந்தன மாலையை குழந்தைகளுக்கு அணிவிக்கும் போது, அவர்கள் வாயில் வைத்து கடித்தாலும் எந்த பதிப்பும் வராது. மேலும், குழந்தைகள் மீது விழும் கண் பார்வைகளின் தோஷங்களும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை முறையாகப் பயன்படுத்தினால் நல்ல விவேகம், மனமகிழ்ச்சி, இலட்சுமி கடாட்சம் கிடைக்கும். மேலும் வாதம், பித்தம், கபம் போன்றவைகளையும், சித்தப்பிரமை, ஒழுக்குப்பிரமேகம், நாவறட்சி, சூடு, நமைச்சலை போக்கி, உடம்பிற்கு வலுவைக் கொடுக்கிறது. அத்துடன், சிறுநீர் பெருக்கியாகவும், இரத்த சுத்திகரிப்பு மற்றும் செரிமான கோளாறுகள் நீங்கவும் பயன்படுகிறது. மேலும் மன உறுதியையும், ஆன்மிக சக்தியையும் வழங்கும் இரத்த சந்தனம் ஆன்மிக முன்னேற்றத்துக்கு பயன்படுவதாக ஆன்மிக சாதகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். இந்த சந்தன மாலையை அணிவதால் எதிர்மறை சக்திகள் விலகுவதுடன், பஞ்ச பூதங்களின் சக்தியை பெற முடிகிறது.