கருங்காலி சாஸ்தர வேல் 6 இன்ச்
கருங்காலி சாஸ்தர வேல் 6 இன்ச்
வேல் வழிபாட்டின் மகத்துவம்:
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் வேல் வழிபாடு தொன்மை வாய்ந்தது, நம்முடைய முன்னோர்கள் வீட்டிலேயே வேலை வைத்து வணங்கி வந்தனர். முருகப்பெருமானின் வேல் நமக்கு ஞானத்தையும் மற்றும் வீரத்தையும் அளிக்கக்கூடியதாகும், வேல் வழிபாடு நமது தீவினைகளையும், தீய குணங்களையும் அழித்து நம்மை செம்மைப்படுத்துகிறது. மேலும் நமக்கு வரும் துயரங்களில் இருந்து நம்மை காக்கவும் செய்கிறது.
வேல் வழிபாட்டின் பலன்கள்:
முருகப்பெருமானின் வேலை தினமும் வழிபாடு செய்வதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும், சகல பேறுகளும் கிடைக்கும். பகைவர்களை வெல்லக்கூடியது கருங்காலி வேல். குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும், கணவன் மனைவி ஒற்றுமை மேம்பட்டு நிம்மதி பெருகும். நாம் செய்யும் காரியங்களில் உள்ள தடைகள் விலகி வெற்றி கிட்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும், வியாபாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்,சொந்தமாய் வீடு, நிலம் வாங்குவதில் உள்ள தடைகள் நீங்கும், தடைபட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கும், நவகிரக தோஷங்கள் நீங்கும், மன பயம் நீங்கி வலிமை உண்டாகும், எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்கும்.
வேல் வழிபாட்டினை வீட்டில்/ தொழில் செய்யும் இடங்களில் செய்யலாமா?
வேலை வழிபடுவதற்கு எந்த ஒரு நியதியும் இல்லை. நாம் குடியிருக்கும் வீட்டில்/ தொழில் செய்யும் இடங்களில் வைத்து தாராளமாக வைத்து பூஜித்து வழிபடலாம். விக்கிரகங்களை வைத்து வழிபடுவது போன்ற நியதி எல்லாம் வேல் வழிபாட்டிற்கு கிடையாது. எனவே அச்சம் இன்றி பூஜை அறையில் வேலை வைத்து வணங்கி வரலாம். ஒரு அடி, அரை அடி, மற்றும் அதற்கும் சிறிய அளவில் கூட வாங்கி வைத்து பூஜிக்கலாம்.
கருங்காலி வேல் வழிபாடு செய்யும் முறை:
கருங்காலி வேலை சுத்தமான நீரில் கழுவிவிட்டு நன்கு காய்ந்த பின்னர், ஒரு தூய்மையான துணி கொண்டு துடைத்து விட்டு, பூஜை அறையில் வைத்து வழிபடலாம். ஒரு பித்தளை அல்லது செம்பு தாம்பாளத்தில் நாட்டு மாட்டு திருநீறு அல்லது பச்சரிசியை குமித்து வைத்து கருங்காலி வேலை அதில் ஊன்றி வைத்து வழிபட்டால் கூடுதல் சிறப்பு.
தினமும் நாம் சாமி கும்பிடும்போது கருங்காலி வேலுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு மலர்களால் அலங்கரித்து, முருக பெருமானுக்கு உரிய மந்திரங்கள், உரிய பாடல்கள், 108 போற்றி அல்லது கந்தசஷ்டி கவசம் படித்து, தூப தீப ஆர்த்தி காட்டி வணங்கி வழிபடலாம். இதற்கு அபிஷேகம் தேவை இல்லை, நைவேத்தியம் கட்டாயம் இல்லை. மாதாந்திர சஷ்டி அன்று தாம்பாளத்தில் உள்ள நாட்டு மாட்டு திருநீறு அல்லது பச்சரிசியை மாற்றி புதிய திருநீறு அல்லது பச்சரிசியை வைக்கலாம், ஏற்கனவே வைத்திருந்த திருநீறை பத்திரப்படுத்தி நாம் தினமும் பூசிகொள்ளலாம், பச்சரிசியை சைவ உணவு சமைப்பதற்கு உபயோகிக்கலாம். இவ்வாறு வழிபடுவதே மிகவும் சிறப்பு வாய்ந்தது.