தேவதாரு மாலை 6 MM (108+1 மணிகள்)
தேவதாரு மாலை 6 MM (108+1 மணிகள்)
வரலாறு:
தேவதாரு மரமானது பண்டைய வேத காலத்திலிருந்தே இந்துக்களிடையே தெய்வீக மரமாக வணங்கப்படுகிறது, மேலும் இது தொடர்பான பல புராணக்கதைகளும் உள்ளன. நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத/சித்த மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக தேவதாரு பயன்படுத்தப்படுகிறது. தேவதாரு மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் லட்சுமி தேவி குடியிருப்பாள் என்று நம்பப்படுகிறது. மேலும், தேவர்களையும் வசியம் செய்யும் சக்கியை இந்த தேவதாரு கொண்டுள்ளது. இதன் நன்மைகள் ஆன்மிகத்தில் அளப்பரியதாகும்.
பலன்கள்:
மன அழுத்தத்தை போக்கும்.
தேவதாரு மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களில் ஒன்று தேவதாரு மாலை ஆகும். இந்த மாலை பிரபஞ்சதில் உள்ள நேர்மறையான சக்திகளை தன்னுள் சேமித்து, வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. தேவதாரு மரத்தினுடைய மையப் பகுதியை வட்ட வடிவ மணிகளாகச் செய்து, செப்புக் கம்பி அல்லது பருத்தி நூலைப் பயன்படுத்தி மாலையாக செய்யப்படுகிறது.
தேவதாரு மாலை சூரிய தோஷத்தின் விளைவுகளை குறைக்க உதவுகிறது, மேலும் வலிமை மற்றும் தைரியமின்மை, தன்னம்பிக்கை இல்லாமை, சுயமரியாதை இல்லாமை, ஊக்கமின்மை மற்றும் முயற்சியின்மை ஆகியவற்றை நீக்குகிறது, ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் கண்பார்வை அதிகரிக்கிறது.
தேவதாரு மாலை அணிவதால் செய்யும் காரியத்தில் வெற்றி, புதிய அதிகாரம், தலைமைப் பண்புகள், மனதில் தைரியம், அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் தருகின்றது.
தேவதாரு மணி மாலை அணிவது வீடு மற்றும் பணியிடத்தில் இருந்து எதிர்மறை ஆற்றலை நீக்க உதவுகிறது.
தேவதாரு மாலையின் மணம் ஞாபகசக்தி மற்றும் செறிவை மேம்படுத்துகிறது.
தேவதாரு மரம் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, இது தலைவலியைக் குறைக்க உதவும்.