4 முக ருத்ராட்சம் வெள்ளி டாலர்
4 முக ருத்ராட்சம் வெள்ளி டாலர்
தோற்றம்:
இதனை சுற்றி நான்கு கோடுகள் காணப்படும்.
இதில் புத்தியை தரக்கூடிய புதன் பகவான் ஆட்சி செய்கிறார்.
மேலும் இதில் தெய்வமாக நான்முகனான பிரம்மாவும், கல்வியைத் தரக்கூடிய சரஸ்வதி தேவியும் வீற்றிருக்கிறார்கள்.
பலன்கள் :
இதை அணிவதால் நமது பழைய பாவம் ஒழிந்து, புதிய பிறவி எடுத்தது போன்ற பலன் உண்டாகும்.
மேலும் இதை அணிவதால் கண்கள் ஒளிபெறும், மனம் அமைதி பெரும், பேச்சுதிறமை அதிகரிக்கும்.
இந்த நான்கு முக ருத்ராட்சம் நான்கு திசைகளிலும் புகழை தரக்கூடியது.
மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளான பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய ஒவ்வொரு நிலைகளிலும் இது நல்ல பலனை கொடுக்கும். நான்கு முக ருத்திராட்சம் மனஒருமைப்பாட்டையும், நல்ல ஞாபக சக்தியையும் தரும்.
மன நோய்கள், காக்காய் வலிப்பு, கல்லீரல் கோளாறு, பக்கவாத நோய்களை போக்க வல்லது.ருத்ராட்சம் அணிந்து நாம் தினமும் குளிக்கும் போது, இந்த ருத்ராட்சத்தின் மீது பட்டு நம் உடலின் மீது படும் நீர் கங்கை நீரில் குளித்த பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் நாம் கங்கையில் நீராடிய புண்ணியம் நமக்கு கிடைக்கும்.
அணிய வேண்டியவர்கள் :
மாணவர்கள், ஆசிரியர்கள், நல்ல சிந்தனையாளர்கள், கவிஞர்கள், மூளைக்கு வேலை தருபவர்கள் இதை அணியலாம்.
குழந்தைகள் நான்கு முக ருத்ரட்சத்தோடு ஆறு முக ருத்ராட்சமும் அணிந்து கொண்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.