6 முக ருத்ராட்சம்
6 முக ருத்ராட்சம்
தோற்றம்:
ஆறுமுகம் என்றாலே ஆறுமுகமுடைய அந்த முருகனையே குறிக்கும். மேலும் இதில் கணபதியின் அருளும், மஹாலஷ்மியின் அருளும் பூரணமாக இருக்கிறது.
இதில் செல்வங்களை வழங்கக்கூடிய சுக்கிர பகவான் ஆட்சி செய்கிறார்.
பலன்கள் :
இதை அணிபவர்கள் நல்ல மனவலிமையும், நல்ல அறிவையும், நல்ல திறமையும் அடைவார்கள். மேலும் முருகனின் துணிவும் தைரியமும் நமக்கு உண்டாகும்.
நான்கு முகத்தோடு இதை இணைத்து அணிந்தால் கல்வியில் சிறக்கலாம். இதை கைகளிலும் அணிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சம் அணிந்து நாம் தினமும் குளிக்கும் போது, இந்த ருத்ராட்சத்தின் மீது பட்டு நம் உடலின் மீது படும் நீர் கங்கை நீரில் குளித்த பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் நாம் கங்கையில் நீராடிய புண்ணியம் நமக்கு கிடைக்கும்.
அணிய வேண்டியவர்கள்:
மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், சொற்பொழிவாளர்கள் இதனை அணியலாம்.