கணேஷ் ருத்ராட்சம்
கணேஷ் ருத்ராட்சம்
தோற்றம்:
இதன் பெயரே நமக்கு இதை பற்றி புரியவைக்கிறது இது கணபதியின் அம்சம் என்று.
ஏனெனில் இதன் வடிவமும் கணபதியை போலே இருக்கும், அதாவது இந்த ருத்ராட்சம் அதன் மீது கணபதியின் துதிக்கையை கொண்டு இருக்கும். மேலும் இதில் விக்ன கணபதியின் அருள் முழுவதும் நிறைந்துள்ளது.
இந்த கணேஷ் ருத்ராட்சத்திலும் முகங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக ஐந்து முகம் முதல் எட்டு முகம் வரை.
மேலும் இதன் ஐந்து முகங்கள் சிவபெருமானின் அருளை குறிக்கின்றது.
பலன்கள் :
பிள்ளையார் சுழி போட்டு எந்த செயலை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம் என்பது போல, கணபதியின் அருள் நிறைந்த இந்த ருத்ராட்சத்தை அணிபவர்கள் எந்த செயலை மேற்கொண்டாலும் அதில் முழு வெற்றி காண்பது உறுதி.
இந்த கணேஷ் ருத்ராட்சம் வாழ்க்கையில் தோன்றும் அனைத்து தடைகளையும் முழுவதுமாக நீக்கும்.
மேலும் இதை அணிவதால் பகுத்தறியும் புத்தி, எழுத்தாற்றல், கலைகளில் தேர்ச்சி, புகழ், செல்வம் இவை அனைத்தும் கிடைக்கும்.
சனி தோஷம் உள்ளவர்கள் இதை அணிந்தால் சனி பகவானின் தீய பலன்கள் நீங்கி, நன்மைகள் விளையும்.
ருத்ராட்சம் அணிந்து நாம் தினமும் குளிக்கும் போது, இந்த ருத்ராட்சத்தின் மீது பட்டு நம் உடலின் மீது படும் நீர் கங்கை நீரில் குளித்த பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் நாம் கங்கையில் நீராடிய புண்ணியம் நமக்கு கிடைக்கும்.
அணிய வேண்டியவர்கள்:
வாழ்வில் பல தடைகளையும், தொடர் தோல்விகளையும் சந்தித்து கொண்டிருப்பவர்கள் இதை அணிவதால் தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்.
கணபதியை உபாசிப்பவர்கள் இதனுடன் எட்டு முகத்தையும் சேர்த்து அணிவது மிகவும் உத்தமமாகும்.
மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் அனைவரும் இதை அணியலாம்.
கணேஷ் ருத்ராட்ச மந்திரம் :
ஓம் கம் கணபதயே நமஹ:
ஓம் மஹா கணபதயே நமஹ:
ஓம் சங்கட ஹர கணபதயே நமஹ:
இதில் ஓம் என்பது பிரணவ மந்திரமாகும். கம் என்பது கணேச மந்திரமாகும். 'க' - கணேசரைக் குறிக்கும்; 'ம்' - கவலைகளை விரட்டும் பிந்துவைக் குறிக்கும். இறை வழிபாட்டின்போது ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு இம்மந்திரத்தை உச்சரிப்பது மிக உத்தமமாகும்.