3 முக ருத்ராட்சம்
3 முக ருத்ராட்சம்
தோற்றம்:
இதனை சுற்றி மூன்று கோடுகள் காணப்படும்.
இந்த மூன்று முகமானது திரிக்காலாக்னி என்று சொல்லக்கூடிய சோமம், சூரிய, அக்னி ஆகிய மூன்று அம்சங்களை உடைய முக்கண்களின் ஸ்வரூபமாகும். இதில் சோமம் என்பது சந்திரனை குறிக்கும்.
சூரியன், சந்திரன், அக்னி தேவன் மூவருமே இதன் அதிபதிகள் ஆவர். இவை மூன்றுமே பிரகாசமான ஒளி தரக்கூடியது. இந்த மூவொலிகளும் அறிவின் ஒளியாக இங்கு கருதப்படுகின்றது.
இதை அங்காரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். இந்த செவ்வாயின் அதிபதி முருகன் ஆவார். முருகனும் நெருப்பிலிருந்தே அதாவது சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்தே வந்தவர்.
பலன்கள் :
இதை அணிவதால் செவ்வாய் கிரகத்தின் பாதிப்பினால் வரும் நிலத் தகராறு, விபத்து, விஷ ஜந்துக்களால் உண்டாகும் அபாயம் நீங்கும்.
சிசுஹத்தி (குழந்தையைக் கொன்ற பாவம்), கருக்கலைப்பு செய்த பாவத்தையும் போக்கும்.
குற்ற உணர்வின்றி வாழ வழி வகுக்கும் என்று ஸ்ரீமத்தேவிபாகவதம் கூறுகிறது.
இரத்த அழுத்தநோய், நீரிழிவுநோய், வயிற்றுக்கோளாறு, ஜுரம், கண்பார்வை கோளாறுகள், புற்றுநோய் போன்ற அணைத்து நோய்களையும் போக்கும்.ருத்ராட்சம் அணிந்து நாம் தினமும் குளிக்கும் போது, இந்த ருத்ராட்சத்தின் மீது பட்டு நம் உடலின் மீது படும் நீர் கங்கை நீரில் குளித்த பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் நாம் கங்கையில் நீராடிய புண்ணியம் நமக்கு கிடைக்கும்.
அணிய வேண்டியவர்கள்:
உடல் பலவீனமானவர்கள், சோம்பல் உடையவர்கள், அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறவர்கள் இதை அணிந்தால் பூரண நிவாரணம் பெறலாம். சரும வியாதிகளை போக்கும் வல்லமையும் பெற்றது.
உடல் பலவீனமானவர்கள் மூன்று முக ருத்ராட்சத்தில் மூன்று அல்லது ஒன்பது மணிகள் அணிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஒரு மணி போதுமானது.
பெரியவர்கள் 54+1 என்ற சேர்க்கையில் அணிந்து கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும்.