5 முக ருத்ராட்சம் வெள்ளி டாலர்
5 முக ருத்ராட்சம் வெள்ளி டாலர்
தோற்றம்:
இந்த ஐந்து முக ருத்ராட்சம் அனைவர்க்கும் மிக மிக எளிதாக கிடைக்கக்கூடியது ஆகும்.
இது பஞ்சமுகனான சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகின்றது.
இதில் பஞ்சாட்சிரம் என்று சொல்லக்கூடிய ஓம்நமசிவாய என்னும் ஐந்து எழுத்து இருப்பதாக சொல்வார்கள். இதனால் இதற்கு பஞ்சாட்சர ருத்திராட்சம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
மேலும் இதில் சிவபெருமானின் அம்சமான காலாக்னி ருத்ரர் அருள் நிறைந்துள்ளது. அகோரம், தத்புருஷம், வாமதேவம், ஸத்யோஜாம், ஈசானம் என்னும் சிவனின் ஐந்து முகங்களும் இதன் அதி தேவதையாகும்.
இதனை ஆட்சி செய்பவர் பரம கருணாமூர்த்தியான குரு பகவான் (வியாழன்) ஆவார். குரு அருள் இல்லையேல் திரு அருள் இல்லை என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட அருளை வழங்க கூடியவர் குரு பகவான்.
பலன்கள் :
இதை அணிபவர்கள் சகல தேவர்களாலும் வணங்கப்படுகிறார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.
உணவிலும், பாலுறவிலும் செய்த பாவங்களை போக்குவதாக ஸ்ரீமத்தேவிபாகவதம் கூறுகிறது.
இதை அணிபவர்களுக்கு விபத்துகளால் அகால மரணம் உண்டாகாது.
ருத்ராட்சம் அணிந்து நாம் தினமும் குளிக்கும் போது, இந்த ருத்ராட்சத்தின் மீது பட்டு நம் உடலின் மீது படும் நீர் கங்கை நீரில் குளித்த பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் நாம் கங்கையில் நீராடிய புண்ணியம் நமக்கு கிடைக்கும்.
அணிய வேண்டியவர்கள்:
இவ்வுலகில் உள்ள அனைவர்க்கும் பயன்பட வேண்டும் என்றே இறைவன் இந்த ஐந்து முக ருத்திராட்சத்தை எளிதில் கிடைக்கூடியதாக படைத்துள்ளார்.
புகழையும், மன அமைதியையும் விரும்புபவர்கள் இதை அணியலாம்.
இந்த ஐந்து முக ருத்திராட்சம் தியானத்திற்கு மிகவும் உகந்ததாகும்.