5 முக ருத்ராட்ச மாலை 5 MM (108+1 மணிகள்)
5 முக ருத்ராட்ச மாலை 5 MM (108+1 மணிகள்)
பஞ்சமுக ருத்ராட்சத்தின் பலன்கள் :
ருத்ராட்சம் என்பது சிவ பெருமானின் கண்ணாக போற்றப்படுகின்றது. ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக கருதப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும். அத்தகைய ருத்ராட்சத்தில் பல வகைகள் உள்ளன. இதில் பஞ்சமுக ருத்ராட்சம் என்பது ருத்ர ரூபத்தை உடையது. ஈசானம், தத்புருசம், அகோரம், வாமதேவம், சத்யாஜவம் என்ற பஞ்ச முகங்களை கொண்ட இந்த ருத்ராட்சம் குரு பகவானின் அம்சமாக பார்க்கப்படுகின்றது. பொதுவாக 5 முக மணிகளைக் கொண்டே தியானத்திற்கான மாலை உருவாக்கப்படுகிறது. அதன் காரணமாக பஞ்சமுக ருத்ராட்சத்தைக் கொண்டு உருவாக்கப்படும் மாலை தியான யோக மாலை எனப்படுகிறது. பஞ்சமுக ருத்ராட்ச மாலை அணிவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து காணலாம்.
பலன்கள் :
5 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் ரத்தம் சம்பந்தமான அத்தனை நோய்களும் கட்டுப்படும் என கூறப்பட்டுள்ளது. மிகுந்த ரத்த அழுத்தம் மற்றும் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் 5 முக ருத்ராட்சத்தை அணிவது மிகவும் நல்லது. மேலும், இதை அணிவதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதற்ற நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.ஒரு சிலருக்கு உடலில் வளர்ச்சி திறன் அதிகம் இருப்பதால், அவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளும் சீக்கிரத்தில் ஜீரணித்து, பசி அதிகரித்து தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருக்கின்றனர். இதனால் அவர்களின் உடல் எடை கூடி விடுகிறது. 5 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவர்களுக்கு அதீத பசி உணர்வு கட்டுக்குள் வந்து, அளவாக உட்கொள்ளும் உணர்வை உண்டாக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.இன்றைய அவசர உலகில் எதிலும் வேகம் நிறைந்திருக்கிறது. நாம் எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும் எந்த நேரத்தில், எந்த ஆபத்து நமக்கு ஏற்படும் என்று தெரியாது. சிவனின் சக்தி நிறைந்த 5 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் விபத்து, அகால மரணம் போன்றவை ஏற்படாமல் நம்மை காக்கும்.ஒரு முக ருத்ராக்ஷம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும் நீக்கும் வல்லமை பெற்றது. மேலும் இது உலகளாவிய செல்வங்களையும், ஆன்மிக செல்வங்களையும் அளிக்கும் ஆற்றல் பெற்றதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
அணிய வேண்டியவர்கள்:
இவ்வுலகில் உள்ள அனைவர்க்கும் பயன்பட வேண்டும் என்றே இறைவன் இந்த ஐந்து முக ருத்திராட்சத்தை எளிதில் கிடைக்கூடியதாக படைத்துள்ளார்.
புகழையும், மன அமைதியையும் விரும்புபவர்கள் இதை அணியலாம்.
இந்த ஐந்து முக ருத்திராட்சம் தியானத்திற்கு மிகவும் உகந்ததாகும்.