7 முக ருத்ராட்சம்
7 முக ருத்ராட்சம்
தோற்றம்:
எண்களில் மிகவும் சக்தி கொண்ட எண் ஏழு ஆகும்.
இந்த ஏழு முக ருத்ராட்சம் சூரியன், சப்தமாதர்கள், ஆதிசேஷன், காமதேவன், முருகன் ஆகியோரின் அருள் நிறைந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதில் சப்தமாதர்கள் என்பது அபிராமி, கௌமாரி, மாஹேந்திரி, வைஷ்ணவி, மகேஸ்வரி, வாராஹி, சாமுண்டி ஆகிய ஏழு மாதர்களை குறிக்கும்.
இதனை திருமகளான மகாலட்சுமி ஆட்சி செய்கிறார்.
மேலும் இதன் ஆட்சிக் கிரகமாக நீதிமான் என்று சொல்லக்கூடிய சூரிய புத்திரனான சனி பகவான் விளங்குகிறார்.
சனி கொடுத்தால் தடுப்பாரும் இல்லை, சனி கெடுத்தாலும் தடுப்பார் இல்லை என்று சொல்வார்கள்.
ஏனெனில் நாம் செய்யும் நன்மை தீமையை பொறுத்தே நம் வாழ்க்கையில் சனி பகவானின் செயல் இருக்கும்.
பலன்கள் :
இந்த மணியை அணிபவர்களுக்கு பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் ஆபத்து நேராது.
இதை அணிபவர்க்கும், பூஜிப்பவர்க்கும் துரதிஷ்டங்கள் நீங்கி எல்லா செல்வங்களும் கிட்டும்.
இந்த ஏழு முக ருத்ராட்சத்தை அணிவதால் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
இது பகைவரை அழிப்பதோடு, எதிர்பாலினரை வசியப்படுத்தும் தன்மையும் கொண்டது.
இதை அணிவது வியாபாரத்தில் பெரிய வெற்றியைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து நாம் தினமும் குளிக்கும் போது, இந்த ருத்ராட்சத்தின் மீது பட்டு நம் உடலின் மீது படும் நீர் கங்கை நீரில் குளித்த பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் நாம் கங்கையில் நீராடிய புண்ணியம் நமக்கு கிடைக்கும்.
அணிய வேண்டியவர்கள்:
அனைத்துவித தொழில்கள், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்த ஏழு முக ருத்ராட்சத்தை அணியலாம்.
இதன் ஆற்றல் மிக அளப்பரியது. இதனை அனைவராலும் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே எட்டு முக ருத்ராட்சத்தோடு சேர்த்து அணிந்து கொள்வது நல்லது.
பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம்.
பணப்பெட்டி, பணப்பையில் இதை வைத்தால் பணம் பெருகும்.